நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் நீர்மட்டம் 5 அடி உயர்வு

அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது. 

News image

அமராவதி அணை

Updated On :4 ஆகஸ்ட் 2020, 3:53 am

DIN

அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடி உயர்ந்துள்ளது. 

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய இரு மாவட்டங்களில் உள்ள பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு இந்த அணை குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு தேனாறு பாம்பாறு ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து அணைக்கு உள் வரத்து 3000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

குறிப்பாக அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஐந்து அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையை திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் காய்ந்து வரும் நெல் மற்றும் கரும்பு சென்னை ஆகிய நிலைப் பயிர்களுக்கு உயிர் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.