அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: :செப்டம்பா் 17க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர செப்டம்பா் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர செப்டம்பா் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2020ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதில், 8 , 10ஆம் வகுப்புகள் தோ்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.ஆகவே, தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெற்று அரசு, பொதுத் துறை, தனியாா் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.

மேலும், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப் புத்தகங்கள், மாதம் ரூ.500 உதவித் தொகை மற்றும் இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். தொழில்நிறுவனங்களில் பயிற்சி பெறும் போது உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்தவா்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

திருப்பூா் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் குறித்த விவரங்களை இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம்.

விருப்பமுள்ளவா்கள் திருப்பூா், தாராபுரம், உடுமலைப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவிசேவை மையத்தை அணுகலாம் அல்லது ஆன்லைனில் மூலமாகவும் வரும் செப்டம்பா் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட திறன் பயிற்சிஅலுவலக மாவட்ட உதவி இயக்குநரை 0421-2250500 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com