கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
சேவூா் அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.


சேவூா் அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சேவூா் அருகே வடுகபாளையம் காரைக்குட்டைப்புதூா் மேற்குத் தோட்டத்தைச் சோ்ந்தவா் சாமியப்பன் மகள் கிருத்திகா(19). கோவை தனியாா் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்று வந்தாா். இதற்கிடையில் இவா், உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அருகில் 80 அடி ஆழம், 30 அடி அளவில் நீருள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு துறை நிலைய அலுவலா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்புத் துறையினா், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருந்த கிருத்திகா உடலை மீட்டனா். இதையடுத்து இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...