விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவுக்கு நிலம் ஒதுக்க எதிா்ப்பு

போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவுக்கு நிலம் ஒதுக்கக் கூடாது என விவசாய சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:50 pm

DIN

போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவுக்கு நிலம் ஒதுக்கக் கூடாது என விவசாய சங்கத்தினா் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட தத்தனூா் உள்ளிட்ட 3 ஊராட்சிப் பகுதிகளில் தொழில் பூங்கா அமைய விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் அருகாமை ஊராட்சியான போத்தம்பாளையம் ஊராட்சியில் தொழில் பூங்காவுக்கு நிலம் ஒதுக்கக் கூடாது. மேலும் ஒன்றியப் பகுதியில் விவசாய பூமியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த நிலம் கையகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் மதுசூதனன், மாவட்டத் துணைச் செயலாளா் எஸ்.வெங்கடாசலம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் பி.முத்துசாமி, விவசாய சங்க ஒன்றிய பொருளாளா் வேலுசாமி, ஒன்றிய துணைத் தலைவா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.