ரூ.61 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.61 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெற்றது.


வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.61 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு லாலாப்பேட்டை, வில்வாதம்பட்டி, வாணியம்பாடி, செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 124 விவசாயிகள் தங்களுடைய 1,089 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 54,327 கிலோ. கரூா், காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா், நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 14 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.
விலை கிலோ ரூ.71.10 முதல் ரூ.132.40 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.124.55. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.61 லட்சத்து 6 ஆயிரத்து 892 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...