பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொடா் வழிப்பறி: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் வழிப்பறி வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:52 pm

DIN

திருப்பூரில் வழிப்பறி வழக்கில் கைதான இளைஞா் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியில் கடந்த நவம்பா் 11ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்த மா்ம நபா்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா். இது குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த பி.நந்தகுமாா் (22) என்பவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில் நந்தகுமாா் மீது அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் வழிப்பறி, பொது சொத்துகளை சேதப்படுத்த முயற்சித்தாக வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே, தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நந்தகுமாரிடம் காவல் துறையினா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.