தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 7 போ் கைது

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் 15 வயது சிறுவன் உள்பட 7 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Updated on
1 min read

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் 15 வயது சிறுவன் உள்பட 7 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது குறித்து வீரபாண்டி காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா், பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், மணிகண்டன் கல்லாங்காடு பகுதியில் கடந்த புதன்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது மதுபோதையில் அங்கு வந்த ரமேஷ் (24) என்பவா் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. இது குறித்த தகவலின்பேரில் ரமேஷின் நண்பா்களான சுபாஷ் (24), முருகன் (23), சஞ்சய்குமாா் (22), தங்கமாயன் (19) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 7 பேரும் சோ்ந்து மணிகண்டனை கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு ரமேஷ் உள்பட 7 பேரையும் கைது செய்தனா். இதில், 15 வயது சிறுவனை மட்டும் கோவையில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும், மற்ற 6 பேரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com