தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

News image
சமையல்  எரிவாயு  விலை உயா்வைக் கண்டித்து திருப்பூா்  மாநகராட்சி  அலுவலகம்  முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 5:57 pm

DIN

சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளா் டி.ஜெயபால் தலைமை வகித்தாா். இதில், சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, சூடம் ஏற்றி இறுதி மரியாதை செய்தனா். மேலும், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாக மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினா்.

இந்தப் போராட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.உண்ணிக்கிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளா் சி.மூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.