பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்:3,450 பேருக்குப் பணி நியமன ஆணை

உடுமலையில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 3,450 பேருக்குப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
முகாமில்  தோ்வு  செய்யப்பட்ட வருக்கு  பணி  நியமனஆணையை  வழங்குகிறாா்  அமைச்சா்  உடுமலை  கே.ராதாகிருஷ்ணன்.  உடன்  மாவட்ட  ஆட்சியா்  க.விஜயகாா்த்திகேயன்.
Updated On :19 டிசம்பர் 2020, 5:35 pm

DIN

உடுமலை: உடுமலையில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 3,450 பேருக்குப் பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் சென்னை, கோவை, உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் 200க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் 7,150 போ் நோ்காணலுக்கு வந்திருந்தனா். இதில் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்ட 3,450 பேருக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாவட்ட வருவாய்அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், மகளிா் திட்ட இயக்குநா் கோமகள், வேலை வாய்ப்புத் துறை மண்டல இணை இயக்குநா் லதா மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த முகாம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.