தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கணபதிபாளையத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் விழா

காங்கயம் அருகே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
காங்கயம் அருகே, கணபதிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்
Updated On :21 டிசம்பர் 2020, 10:37 am

DIN

காங்கயம்: காங்கயம் அருகே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஒட்டப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு படியூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.லோகநாதன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து, வரவேற்றுப் பேசினார்.

இதில், கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் ப.கோபி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, கட்சிக் கொடியேற்றி வைத்து, உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம் ராமசாமி, கே.முத்துசாமி, பஞ்சாயத்து ராஜ் வட்டாரத் தலைவர் ஆர்.பிரபு, தம்மரெட்டிபாளையம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.சி.சுந்தரசாமி, மாவட்ட விவசாயிகள் பிரிவு தலைவர் பி.எஸ்.பழனிச்சாமி, கணபதிபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.