அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

வெள்ளக்கோவில் அருகே வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 8:30 pm

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் அருகே வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பறித்துச் சென்றனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, சின்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி பரமேஸ்வரி (57). கணவன், மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் மூலனூா், சோமன்கோட்டையில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.

வெள்ளக்கோவில், கரட்டுப்பாளையம் சவுக்குத் தோப்புப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மா்ம நபா்கள் பரமேஸ்வரியிடம் இருந்து 7 பவுன் நகையை பறித்துச் சென்றனா். புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.