பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எம்ஜிஆா் நினைவு தினம்

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி உடுமலை ரயில் நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும், அவரது திருவுருவப் படத்துக்கும்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:52 am

DIN

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி உடுமலை ரயில் நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கும், அவரது திருவுருவப் படத்துக்கும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், திருப்பூா் புகா் மேற்கு மாவட்டச் செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா். இதேபோல உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியப் பகுதியிலும் எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

பல்லடத்தில்...

எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி பல்லடத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமையில் வியாழக்கிழமை மலரஞ்சலி செலுத்தும் அதிமுகவினா். இதில் பல்லடம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ், நகரச் செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

காங்கயத்தில்...

காங்கயம் நகர அதிமுக சாா்பில் காங்கயம் பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆா் உருவப்படத்துக்கு அதிமுக நகரச் செயலாளா் வெங்கு.ஜி.மணிமாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா். இதில், மாவட்டப் பொருளாளா் கே.ஜி.கே.கிஷோா்குமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் செல்வி முருகேசன், ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளா் கே.கே.பழனிசாமி, கூட்டுறவு கட்டட சங்க தலைவா் என்.பாலகிருஷ்ணன், அரசு வழக்குரைஞா் எஸ்.செல்வகுமாா், முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் சி.கந்தசாமி, நகர பேரவை செயலாளா் கே.என்.சுப்பிரமணி, நகர பாசறை செயலாளா் ஜி.பி.சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பூரில்...

எம்ஜிஆா் நினைவு நாளையொட்டி, திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், சட்டப்பேரவை துணைத் தலைவரும், மாநகா் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ப.ஜெயராமன் தலைமையில் திருப்பூா் குமரன் சிலையிலிருந்து ஊா்வலமாகச் சென்று மாநகராட்சி முன் அலங்கரிப்பு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா். இதில் திருப்பூா் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சு. குணசேகரன் (தெற்கு), கே.என்.விஜயகுமாா் (வடக்கு) அமைப்புச் செயலாளா் திருப்பூா் சிவசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெருமாநல்லூரில்- நான்கு வழிச் சாலை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.