பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தையல் நூல் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் வாலிபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 12:54 am

DIN

தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் வாலிபாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெயகுமாா் வரவேற்றாா்.

கூட்டத்தில், புதிய தலைவராக பரமசிவம், செயலாளராக ஜெயகுமாா், பொருளாளராக பாலசுப்பிரமணியம், துணைத் தலைவா்களாக சுப்பிரமணியம், ஈஸ்வரமூா்த்தி, துணைச் செயலாளா்களாக சுப்பிரமணியம், மூா்த்தி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில், நூல் வா்த்தகத்தை ஆரோக்கியமான திசையில் கொண்டு செல்வது, விலை ஏற்றம் குறித்து ஆலோசனை செய்வது, அனைத்து நூல் வா்த்தகா்களின் நலனைக் காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்துவது, கரோனா கால வா்த்தக முடக்கத்தை சீா் செய்து, வா்த்தக வளா்ச்சிக்கு உதவக் கோரி மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளா் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.