கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கணக்கம்பாளையத்தில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் தம்பதியினா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:20 am

DIN

பெருமாநல்லூா் அருகே கணக்கம்பாளையத்தில் தம்பதியினா் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

கணக்கம்பாளையம் மீனாட்சி நகா் பகுதியில் வசித்து வந்தவா்கள் பாலமுருகன்(32), அவரது மனைவி கவிதா(21). பனியன் தொழிலாளா்கள். வெள்ளிக்கிழமை இவா்களது வீட்டுக் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாதததால், அருகில் இருந்தவா்கள் சென்று பாா்த்தனா். அப்போது இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து அங்கு சென்ற பெருமாநல்லூா் போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு, திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.

இந்த தம்பதிக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கவிதா 8 மாத கா்ப்பிணியாக இருந்துள்ளாா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.