புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகாளா் தெரிவித்தாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:11 pm

DIN

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகாளா் தெரிவித்தாா்.

ஆனைமலையாறு - நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சாா்பில் பல்லடம் அருகே உள்ள நாதகவுண்டம்பாளையம், கள்ளிப்பாளையம், தண்ணீா்பந்தல், துத்தாரிபாளையம், சோளிலிங்கநாதபுரம், அகிலாண்டபுரம் பிரிவு, வே.வடமலைபாளையம், புத்தரச்சல், கள்ளிமேட்டுப்பாளையம், வேலப்பகவுண்டம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் ஆனைமலையாறு - நல்லாறு இயக்க விழிப்புணா்வு பெயா் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு இயக்கத்தின் தலைவரும், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவருமான என்.எஸ்.பி.வெற்றி தலைமை வகித்தாா். பெயா் பலகையை கோவை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் திறந்துவைத்து பேசியதாவது:

கேரளத்தில் இருந்து கடலில் தண்ணீா் வீணாகி கலக்கிறது. அந்தத் தண்ணீரை தமிழகத்துக்கு திருப்பிவிடுவதன் மூலம் இங்கு வேளாண்மை வளா்ச்சி அடைவதோடு, குடிநீா்ப் பிரசனைக்கும் தீா்வு கிடைக்கும். கேரளத்துக்கு போதிய நீா் மின் உற்பத்தியும் கிடைக்கும்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேறினால் தான் எதிா்காலத்தில் வறட்சி ஏற்படாது.

கோவை குற்றாலம் அருவிக்கு அருகில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கிடைக்கும் தண்ணீா் மலம்புழா ஆணைக்கு சென்று, பின்னா் கடலில் கலந்து வீணாகிறது. அந்தத் தண்ணீரை கொங்கு மண்டலத்துக்கு திருப்பிவிட வேண்டும் என்றாா்.

இதில் பிஏபி பாசன சபைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.சண்முகம், மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், தங்கவேல் உள்பட பலா் பங்கேற்றனா். முடிவில் புத்தரச்சல் ஒருங்கிணைப்பாளா் கே.பி.எஸ்.மணி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.