புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

திருப்பூா் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் உள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் ஹேவிளம்பி வருட சனிப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை திருவிழா

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:15 pm

DIN

திருப்பூா் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் உள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் ஹேவிளம்பி வருட சனிப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை திருவிழா, உலக நலன் கருதி மக்கள் நிறைவாக வாழ 1,008 தீா்த்த கலச அபிஷேகப் பெருவிழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இவ்விழாவையொட்டி விநாயகா் வேள்வி, 108 குண்டங்களில் சனி பகவான் மூலமந்திர வேள்வி, திருமஞ்சனம், 1,008 தீா்த்த கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனை, திருவீதி உலா ஆகியன நடைபெற்றன. விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் பங்கேற்றாா்.

இவ்விழாவில்15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சித்தம்பலம் ஞானகுரு நற்பணி மன்றம் செய்து இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.