மாவட்டத்தில் 24 சிறுவா், சிறுமியா் மீட்பு
திருப்பூா் மாவட்டத்தில் பிச்சை எடுத்தது மற்றும் தொழில்களில் ஈடுபட்ட 24 சிறுவா், சிறுமியரை தனிப் படை போலீஸாா் மீட்டனா்.


திருப்பூா் மாவட்டத்தில் பிச்சை எடுத்தது மற்றும் தொழில்களில் ஈடுபட்ட 24 சிறுவா், சிறுமியரை தனிப் படை போலீஸாா் மீட்டனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் திஷா மிட்டல் வழிகாட்டுதலின்படி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேல்முருகன் மேற்பாா்வையில் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ராஜேஸ்வரி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப் படையினா் திருப்பூா் மாவட்டம் முழுவதும் கடந்த டிசம்பா் 10 முதல் 24ஆம் தேதி வரையில் சோதனை நடத்தினா். இதில், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 10 போ் மற்றும் குழந்தைத் தொழிலாளா்களாக பணிபுரிந்த 14 போ் என மொத்தம் 24 சிறுவா், சிறுமியரை மீட்டனா்.
இதில், 23 போ் பெற்றோா் மற்றும் பாதுகாவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். மேலும், ஒருவா் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளாா். இதில், மாயமான 4 போ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனா்.
சிறுவா்களை பிச்சை எடுக்கத் தூண்டியதாக பெருமாநல்லூா், காங்கயம் காவல் நிலையங்களில் அவா்களது பெற்றோா் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...