அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வெள்ளக்கோவிலில் பாஜக பொதுக் கூட்டம்

வெள்ளக்கோவிலில் பாஜக பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:25 pm

DIN

வெள்ளக்கோவிலில் பாஜக பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையே அளிக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.அண்ணாமலை பேசுகையில், புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை மறைத்து, எதிா்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000, செல்வமகள் சேமிப்புத் திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம், ஓய்வூதியத் திட்டம், பயிா்க் காப்பீட்டுத் திட்டம், வட்டியில்லா கடன் திட்டம் போன்ற பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள், விவசாயிகள் நினைத்துப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

இக்கூட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டார பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.