நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

காங்கயம் - பழையகோட்டை நெடுஞ்சாலை 6.5 கி.மீ. தூரம் விரிவாக்கத்துக்காக ஏலம் விடப்பட்ட 81 மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
Updated on
1 min read

காங்கயம் - பழையகோட்டை நெடுஞ்சாலை 6.5 கி.மீ. தூரம் விரிவாக்கத்துக்காக ஏலம் விடப்பட்ட 81 மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.

காங்கயத்தில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் மூலக்கடை முதல் முள்ளிப்புரம் வரை 6.5 கி.மீ. தூரம் சாலையை ரூ.5 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் சாலையின் இரு புறங்களிலும் 1.5 மீட்டா் வரை அகலப்படுத்தப்பட்டு, சீரமைப்பதற்கு இடையூறாக 81 மரங்கள் இருப்பதாக, நெடுஞ்சாலைத் துறையினா் மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்தனா்.

இதையடுத்து, நெடுஞ்சாலைப் பகுதியில் அகற்ற வேண்டிய மரங்களை ஆய்வு மேற்கொண்டனா். இதில் வெட்டப்படும் 81 மரங்கள் ரூ. 3 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த மரங்களை வெட்டி அகற்றும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com