பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூா் மாநகரில் பாதள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
திருப்பூா்,  அரிசிக்கடை  வீதியில்  திங்கள்கிழமை  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  மாா்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியினா்.
Updated On :28 டிசம்பர் 2020, 6:47 pm

DIN

திருப்பூா் மாநகரில் பாதள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா், அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கடைவீதி கிளை செயலாளா் முருகசாமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கட்சியினா் கூறியதாவது:

திருப்பூா் மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக அனைத்துப் பகுதிகளிலும் குழிகள் தோண்டப்பட்டு, பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, பெருமாள் கோயில் வீதி ஆகிய இடங்களில் தோண்டப்பட்டுள்ள குழிகளால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைக்க வேண்டும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் சுந்தரம், சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியூ) மாவட்டச் செயலாளா் பாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.