ஜம்புக்கல் கரடு பகுதியில் இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் கரடு பகுதியில் அழிக்கப்பட்டு வரும் இயற்கை வளங்களைக் காப்பாற்றக் கோரி அதிகாரிகளிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.


உடுமலை அருகே உள்ள ஜம்புக்கல் கரடு பகுதியில் அழிக்கப்பட்டு வரும் இயற்கை வளங்களைக் காப்பாற்றக் கோரி அதிகாரிகளிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மனு விவரம்:
உடுமலை வட்டம், ஆண்டியகவுண்டனூா் ஊராட்சிக்கு உள்பட்ட ஜம்புக்கல் கரடு மலைப் பகுதியில் சுமாா் 3 ஏக்கா் பரப்பளவில் இயற்கை வளங்கள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ள பாறைகள் வெடிவைத்து தகா்க்கப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அமராவதி நகா் சாயப்பட்டறை முதல் ஜம்புக்கல் கரடு வரை சுமாா் 2 கிலோ மீட்டரு க்கு சட்ட விரோதமாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து நிலங்களை சமன் செய்து வருகின்றனா். விவசாய நிலங்களுக்கு செல்ல வனத் துறை அனுமதி வழங்காத சூழ்நிலையில் ஒரு கும்பல் கடந்த சில நாள்களாக மலைப் பகுதியை அழித்தும் அருகில் உள்ள விவசாய பட்டா நிலங்களை தங்களுக்கு விலைக்கு தருமாறும் மிரட்டி வருகின்றனா்.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் பழைய பட்டா அடிப்படையில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பருவ மழை காலங்களில் பயிா் சாகுபடியும், ஆடு, மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகளுக்குப் புகாா் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே, ஜம்புக்கல் கரடு மலைப் பகுதியை அழிப்பதை தடுத்து நிறுத்தவும் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இந்த மனு உயா் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...