கரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையை தமிழக முதல்வர் திறந்த மனதுடன் அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்துக்கு தலைமை வகித்த ஏஐடியூசி மாநிலத் தலைவரும், திருப்பூர் மக்களவை உறுப்பினருமான கே.சுப்பராயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றானது மிகவேகமாக அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிரத்தை அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது தமிழகம். இதற்கு காரணம் இந்த மாநிலத்தை ஆளும் அதிமுக அரசின் பொறுப்பற்ற, கையாலாகாத அரசாகும். சிக்கலான, நெருக்கடியான இன்றைய சூழ்நிலையை பொருத்தமான வழிமுறைகளின் மூலம் எதிர்கொள்ள தகுதியற்ற அரசு என்பதை நோய்த்தொற்று நடவடிக்கைகளின் வேகம் நிரூபித்து வருகிறது.
இதே முதல்வர் கடந்த பல நாள்களுக்கு முன்னர் பேசுகையில் 3 நாள்களில் கரோனா ஒழிக்கப்பட்டுவிடும் என்று அறிவித்தார். ஒரு பொறுப்புள்ள பதவியில் உள்ள முதல்வர் பொறுப்பற்ற முறையில் தேவையற்ற நம்பிக்கை அளிக்கும் முறையில் 3 நாள்களில் கரோனா ஒழிக்கப்பட்டு விடும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு முடிந்து நாள்கள் என்னாகிறது, நாட்டு நிலைமை எங்கே போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் கரோனாவால் 112 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், திடீரென சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கத்தில் வெறும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் உள்ள பல மாவட்டங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. மற்ற மாவட்டங்களில் இல்லாதது போன்றும், சென்னையைச் சுற்றி மட்டுமே இருப்பது என்பது இட்டுக்கட்டி காட்டப்படும் பிம்பம். தமிழகம் முழுவதிலும் தீவிரமாக பரிசோதனை மேற்கொண்டால் உண்மையான நிலவரம் தெரியும். மாநில அரசு கிராமப்புறங்களில் மருத்துவ முகாம் அமைத்து அனைத்து இடங்களிலும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதே போல் நிவாரணம் வழங்குவதன் மூலமாகவும், மக்கள் மீது குற்றம் சாட்டுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் குற்றவாளிகள் அல்ல மக்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய மாநில அரசு மற்றும் மத்திய அரசுதான் குற்றவாளி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

தொடர்விடுமுறை: இன்று முதல் கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
5 கிலோ சிலிண்டர் விலை உயர்வு! பாதிப்படையும் சிறு, குறு வியாபாரிகள்!

சிலிண்டர் அல்ல, மக்களின் உணவுக்கே விலை உயர்கிறது: பாஜகவை சாடிய அகிலேஷ்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


