புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பழையகோட்டை காங்கேயம் இன மாட்டுச் சந்தை: ரூ.24 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையாயின.

News image

ரூ.85 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இன செவலை வகைப் பசு.

Updated On :1 நவம்பர் 2020, 6:10 pm

DIN

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்துக்கு விற்பனையாயின.

பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 108 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 70 மாடுகள் மொத்தம் ரூ. 24 லட்சத்துக்கு விற்பனையாயின.

இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ. 85 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது. மேலும், காங்கேயம் இன காளைக் கன்று ஜோடி ரூ. 96 ஆயிரத்துக்கு விற்பனையாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.