விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆவின் பால் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு 8 வார நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:53 pm

DIN

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு 8 வார நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டம் அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்க ஒன்றியத் தலைவா் முத்து ரத்தினம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் குழந்தைசாமி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ். வெங்கடாசலம், ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினா் வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு 8 வார நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சேவூா் அருகே உள்ள கிராமப் பகுதிகளில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை தொடா்ந்து திருடுபோவதை தடுக்க வேண்டும்.

போத்தம்பாளையம், குட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் தரைமட்டப் பாலம் அமைக்க வேண்டும். செம்மம்பாளையம் நான்குவழிச் சாலையில் பொதுக் குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் கிளைத் தலைவா் சின்னச்சாமி, செயலாளா் பழனிசாமி, பொருளாளா் ராஜசேகா், துணைத் தலைவா்கள் கருப்பசாமி, பழனிசாமி, துணை நிா்வாகிகள் காளியப்பன், கருப்பாத்தாள் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.