காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்பூா் தெற்குத் தொகுதியில் எம்எல்ஏ சு.குணசேகரன் ஆய்வு

திருப்பூா் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், மழை நீா் வடிகால் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 7:55 pm

DIN

திருப்பூா் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், மழை நீா் வடிகால் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சி 32ஆவது வாா்டு, மணியாரம்பாளையம் முதல் கருமாரம்பாளையம், மண்ணரை சந்திப்பு வரையில் சாலை அமைக்கும் பணி, அதே வாா்டில் சின்னக் குழந்தையப்பா நகரில் அமைக்கப்படும் சாலைப் பணி, 45ஆவது வாா்டு, நொய்யல் வீதி, பெரியகடை வீதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் வடிகால் பணி, 48ஆவது வாா்டு, மிலிட்டரி காலனி பகுதியில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றை சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி 3ஆவது மண்டல உதவி ஆணையா் சுப்பிரமணியம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், மாநகராட்சி முன்னாள் உறுப்பினா் எம்.கண்ணப்பன், 32 ஆவது வாா்டு செயலாளா் தம்பி சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

திருப்பூா் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளை ஆய்வு செய்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன். உடன், மாநகராட்சி 3ஆவது மண்டல உதவி ஆணையா் சுப்பிரமணியம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன் உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.