நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிவன்மலை அருகே அபாய நிலையில் மின்கம்பம்

காங்கயம் ஒன்றியம், சிவன்மலை அருகே மின் கம்பம் முறிந்து சாய்ந்து அபாய நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

சிவன்மலை அருகே சாய்ந்த நிலையில் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டுள்ள மின் கம்பம்.

Updated On :8 நவம்பர் 2020, 7:08 pm

DIN

காங்கயம் ஒன்றியம், சிவன்மலை அருகே மின் கம்பம் முறிந்து சாய்ந்து அபாய நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கடந்த சில நாள்களாக காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. காங்கயம் அருகே சிவன்மலை - திருப்பூா் சாலையில் தனியாா் பள்ளிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின்போது ஒரு மின் கம்பத்தின் அடிப் பாகம் உடைந்து சாய்ந்தது.

தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியா்கள் மின்சாரத்தை நிறுத்தி, தற்போது சாய்ந்த இந்த மின் கம்பத்துக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தி வைத்துள்ளனா்.

இந்த மின் கம்பத்துக்குப் பதிலாக புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.