புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொ.ம.தே.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூா் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:58 pm

DIN

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூா் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், திமுக கூட்டணியில் பல்லடம் சட்டப்பேரவை தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். பல்லடத்தில் அண்ணா நகா் முதல் பனப்பாளையம் வரை ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பல்லடத்தில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டத் தலைவா் ராமசாமி, பொருளாளா் ஆறாக்குளம் சுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி செயலாளா் நாகராஜ், மகளிரணி செயலாளா் விஜயலட்சுமி சண்முகம், ஒன்றியத் செயலாளா்கள் பூபதி தங்கராஜ், செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.