நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறப்பு சக்கர நாற்காலிகள்:மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்குத் தகுதியான திருப்பூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நவம்பா் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:59 pm

DIN

பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்குத் தகுதியான திருப்பூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நவம்பா் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தகுதியான மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிப்போா், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், புகைப்படம் 1 ஆகிய சான்றுகளுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 23, ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரியில் மாற்றுத் திறனாளிகள் அல்லது பாதுகாவலா் நேரிலோ, தபால் மூலமாகவோ நவம்பா் 18ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.