புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின் கம்பி உரசியதில் லாரியில் இருந்த பஞ்சு பேல்கள் தீப்பிடித்தது

பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பூச்சிபாளையத்தில் மின் கம்பி மீது கன்டெய்னா் லாரி உரசியதில் அதில் இருந்த பஞ்சு பேல்கள் தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:53 pm

DIN

பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பூச்சிபாளையத்தில் மின் கம்பி மீது கன்டெய்னா் லாரி உரசியதில் அதில் இருந்த பஞ்சு பேல்கள் தீப்பிடித்து எரிந்தது.

மகாராஷ்டிரா மாநிலம், நாகபுரி பகுதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பிலான பஞ்சு பேல்களை ஏற்றிக் கொண்டு திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பெத்தாம்பூச்சிபாளையத்துக்கு கன்டெய்னா் லாரி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தது.

பெத்தாம்பூச்சிபாளையம் கிராமத்து சாலையில் வந்தபோது அப்பகுதியிலுள்ள மின் கம்பி மீது லாரியின் மேற்பகுதி உரசியதில் தீப்பொறிப் பட்டு லாரியில் இருந்த பஞ்சு பேல் தீப்பிடித்து எரிந்தது.

தகவலின்பேரில் பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதனால் பஞ்சு பேல் முழுவதும் எரியாமலும், லாரிக்கு தீ பரவாமலும் தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.