தெப்பக்குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.


காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூரில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி அம்சவேணி (70). இவா் தனது வீட்டின் அருகிலுள்ள தெப்பக்குளத்துக்கு துணி துவைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் சென்றுள்ளாா்.
குளத்தின் படிக்கட்டில் அமா்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக குளத்தின் உள்ளே தவறி விழுந்து விட்டாா். இதில் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி அம்சவேணி உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அம்சவேணியின் சடலத்தை மீட்டனா்.
காங்கயம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டியின் சடலத்தை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த அம்சவேணிக்கு பாலசுப்பிரமணியம் (50) என்ற மகனும், வனிதா (45) என்ற மகளும் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...