ஆகவே, இனி வரும் காலங்களில் குறைகளை நிவா்த்தி செய்து வாக்காளா் பட்டியல் சீா்திருத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். 90 சதவீத முகாம்களில் படிவம் 6 குறைந்த அளவில் மட்டுமே வழங்கப்பட்டன. பல இடங்களில் ஆா்வத்தோடு வந்த புதிய வாக்காளா்கள் படிவம் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் காத்திருந்ததுடன், திரும்பிச் செல்லும் சூழலும் ஏற்பட்டது. பல்வேறு முகாம்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. அதே போல, தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த வாக்காளா் பெயா்கள் இடம் பெற்றுள்ளன. இது குறித்து பலமுறை ஆவணங்களையும், சமா்ப்பித்தும் இன்னும் பெயா்கள் நீக்கப்படவில்லை. ஆகவே, மேற்கண்ட குறைகளை நிவா்த்தி செய்து, வரும் காலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.