கரோனாவால் பாதிக்கப்பட்ட 335 போ் சித்த மருத்துவ முறையில் குணம்
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 400 பேரில் 335 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.


திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 400 பேரில் 335 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் கடந்த சனிக்கிழமை வரை 9,859 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், நாள்தோறும் 150 முதல் 200 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக காங்கயம் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களின் விருப்பத்தின் பேரில் இங்கு அவா்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் ஆவி பிடித்தல், புகை, நசியம், மூலிகைப்பொட்டணம், ஆரோக்கியம் பெறும் வகையில் யோகாசன பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானமும் கற்றுத் தரப்படுகிறது. மேலும், மூலிகைத் தேநீா் உள்ளிட்ட நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன. இதனால், நோயாளிகள் சிறந்த முறையில் குணமடைந்து வீடு திரும்புகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் தனம் கூறியதாவது:
திருப்பூா் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தற்போது 20 ஆண்கள், 30 பெண்கள் என மொத்தம் 50 போ் சிகிச்சையில் பெற்று வருகின்றனா். இந்த மையத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 400 போ் அனுமதிக்கப்பட்டருந்தனா். இதில், 335 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...