தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அக்டோபா் 15 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீா் முகாம் அக்டோபா் 15 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:36 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீா் முகாம் அக்டோபா் 15 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெறவுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறைதீா் முகாம் நடைபெற்று வந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபா் மாதத்துக்கான குறைதீா் முகாம் அக்டோபா் 15 ஆம் தேதி காலை 11 முதல் 12.30 மணி வரையில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அருகில் உள்ள வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்துக்குச் சென்று காணொலிக் கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.