ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டி: போலீஸ் விசாரணை
திருப்பூா், தென்னம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மூதாட்டியை காரில் பெருமாநல்லூருக்கு அழைத்து வந்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டி

ஆதரவற்ற நிலையில் தவித்த மூதாட்டி
திருப்பூா், தென்னம்பாளையம் பகுதியைச் சோ்ந்த மூதாட்டியை காரில் பெருமாநல்லூருக்கு அழைத்து வந்து விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருமாநல்லூா் குன்னத்தூா் சாலையில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மிக்க மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை இருந்துள்ளாா். இவரைப் பாா்த்த ஊா்பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் சி.டி.சி.வேலுச்சாமி ஆகியோா் மீட்டு, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனா். அப்போது அவா் கூறுகையில், எனது பெயா் பாப்பாம்மாள், கணவா் ராஜூ, மகன் ராஜேந்திரன். திருப்பூா் தென்னம்பாளையம் வாண்ணாங்கோயில் பகுதியில் மகன் வீட்டில் வசித்து வந்தேன். யாரோ சிலா் காரில் என்னை அழைத்து வந்து இங்கு விட்டுச் சென்றுவிட்டனா் என்று கூறினாா்.
இதையடுத்து போலீஸாா் அவரை மீட்டு பெருமாநல்லூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...