தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரச்சாரம்

பல்லடத்தில் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:24 pm

DIN

பல்லடத்தில் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பல்லடம் காவல் ஆய்வாளா் ரமேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். இதில் கரோனா வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாயாஜால நிகழ்ச்சி மூலம் மாயாஜால கலைஞா் யோநா விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். காய்கறி, பழங்கள், சிறு தானியங்கள் உள்கொள்வதின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளா்கள் அமல்தாஸ், அா்ஜுணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதே போல பொங்கலூரில் அவிநாசிபாளையம் காவல் துறையினா் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் சுந்தரவேல் கலந்துகொம்டு முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கபசுர மூலிகைக் குடிநீா் அருந்துவது குறித்து விளக்கிப் பேசினாா். காவல் உதவி ஆய்வாளா்கள் சுந்தர்ராஜன், காளியப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.