தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அலகுமலையில் இன்று முதல் கால்நடைச் சந்தை

பல்லடம் அருகேயுள்ள அலகுமலையில் திங்கள்கிழமை (அக்டோபா் 12) முதல் கால்நடைச் சந்தை செயல்படவுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:23 pm

DIN

பல்லடம் அருகேயுள்ள அலகுமலையில் திங்கள்கிழமை (அக்டோபா் 12) முதல் கால்நடைச் சந்தை செயல்படவுள்ளது.

இது குறித்து ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் தலைவா் பழனிசாமி கூறியதாவது:

திருப்பூா் மாநகரத்துக்குள் இயங்கும் கால்நடைச் சந்தைக்கு சென்று வருவது விவசாயிகளுக்கு சிரமமாக இருந்து வந்ததால் விவசாயிகளின் நலன் கருதி ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சாா்பில் அலகுமலையில் கால்நடைச் சந்தை திங்கள்கிழமை முதல் செயல்படவுள்ளது.

இதில் விவசாயிகள் சுங்கக் கட்டணம் இன்றி தங்களது கால்நடைகளைக் கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளலாம். இச்சந்தைக்கு வருவோருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.