47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கல்

திருப்பூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் திங்கள்கிழமை வழங்கினார்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 8:06 am

DIN

திருப்பூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் திங்கள்கிழமை வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 12 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வழங்கி கெளரவித்தார். இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதுடன் வெள்ளி பதக்கம், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார், தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருது பெற்றவர்கள் விவரம்: காரத்தொழுவு, அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கே.செளந்தரராஜன், காங்கயம், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சிவகுமார், உடுமலை, பாரதியார் பெண்கள் நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வி.விஜயலட்சுமி, பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.அன்புசெல்வன், உடுமலை, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சி.சுப்பிரமணியன், ராயபுரம், நகரவை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.அங்குலட்சுமி, குப்புசாமிநாயுடுபுரம், அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன், மூலனூர், கிளாங்குண்டல் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.சந்திரகாந்தி, சர்க்கரைபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் என்.மல்லிகா, துரைராமசாமி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பி.புவனேஸ்வரி, அவிநாசி, பழனியப்பா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர் கே.உமாமகேஸ்வரி, திருமூர்த்தி நகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் ஏ.சுப்பிரிமணி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.