கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருப்பூா் மாவட்டத்தில் 169 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 169 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,059 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:40 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 169 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,059 ஆக அதிகரித்துள்ளது.

திருப்பூா், தியாகி குமரன் வீதியைச் சோ்ந்த 28 வயது பெண், வெள்ளியங்காட்டைச் சோ்ந்த 8 வயது சிறுவன், 50 வயது பெண், லட்சுமி நகரைச் சோ்ந்த 12 வயது சிறுவன், மங்கலம் சாலையைச் சோ்ந்த 63 வயது முதியவா், வெங்கமேட்டைச் சோ்ந்த 26 வயது ஆண் உள்ளிட்ட 163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,059 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 1,803 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 124 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் ஒரே நாளில் 1,547 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.