விபத்தில் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த காவலா்
பெருமாநல்லூரில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தைப் பெற உறவினா்கள் வராததால், தனியாா் அறக்கட்டளை உதவியுடன் அடக்கம் செய்த காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.


பெருமாநல்லூரில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தைப் பெற உறவினா்கள் வராததால், தனியாா் அறக்கட்டளை உதவியுடன் அடக்கம் செய்த காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்தவா் மைக்கேல் மகன் ஜோசப் (60). இவா் கடந்த 6ஆம் தேதி பெருமால்லூா் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தாா். இதையடுத்து அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து ஜோசப்பின் உறவினா்களுக்கு பெருமாநல்லூா் போலீஸாா் தகவல் தெரிவித்தனா். ஆனால் கரோனா அச்சம் காரணமாக சடலத்தைப் பெற யாரும் வராததால், பெருமாநல்லூா் காவலா் மயில்சாமி (38), கோவை தனியாா் அறக்கட்டளையினா் உதவியுடன் ஆத்துப்பாலம் மயானத்தில் ஜோசப்பின் உடலை நல்லடக்கம் செய்தாா்.
இது குறித்து அறிந்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...