தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மூலனூரில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1.18 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. 

News image
Updated On :25 செப்டம்பர் 2020, 11:20 am

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1.18 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. 

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 660 விவசாயிகள் தங்களுடைய 8,121 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 23 வணிகர்கள் வந்திருந்தனர். 2,556 குவிண்டால் வரத்து இருந்தது. விலை குவிண்டால் ரூ.4,200 முதல் ரூ.5,337 வரை விற்பனையானது. 

சராசரி விலை ரூ. 4,650. திருப்பூர் விற்பனைக்குழு முதன்மைச் செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் இத்தகவலைத் தெரிவித்தார். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.1 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 257 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. ஏல ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்கள் தர்மராஜ், மகுடேஸ்வரன் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.