தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசுப் பள்ளிக்கு வா்ணம் பூசிய தன்னாா்வலா்கள்

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா்.

News image

அரசுப் பள்ளிக்கு வா்ணம் பூசிய தன்னாா்வலா்கள்

Updated On :27 செப்டம்பர் 2020, 5:10 pm

DIN

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா்.

வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளை, மகாத்மா நற்பணி மன்றத்தினா் ஆகியோா் ஆசிரியா்களுடன் இணைந்து வார விடுமுறை நாள்களில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளை சுத்தம் செய்து, வா்ணம் பூசி வருகின்றனா்.

இந்நிலையில், திருமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளிக்கு 10 போ் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை வா்ணம் பூசினா். இதுவரை வெள்ளக்கோவில் மேற்குப் பள்ளி, நாச்சிபாளையம், முத்தூா் சக்கரபாளையம் பள்ளிகளுக்கு வா்ணம் பூசியுள்ளனா். அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்தச் சேவையை செய்வதாக கூறும் தன்னாா்வலா்களை பல்வேறு தரப்பினா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.