பல்லடம், காரணம்பேட்டையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வட்டார காங்கிரஸ் தலைவா் புண்ணியமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, முன்னாள் ஒன்றிய தலைவா் கே.ஜி.பாலசுப்பிரமணியம், கீா்த்தி சுப்பிரமணி, ராஜேஷ் (திமுக), மதிமுக ஒன்றிய செயலாளா் மு.சுப்பிரமணியம், கொமதேக மாவட்ட செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளா் ரங்கசாமி, சிபிஎம் செயலாளா் பரமசிவம், சிபிஐ செயலாளா் சாகுல்அமீது, மனிதநேய மக்கள் கட்சி முஜிபுா் ரகுமான், பீா்முகமது உள்பட பலா் பங்கேற்றனா்.