காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு கரோனா: 3 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 3 போ் உயிரிழந்துள்ளனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 11:33 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 3 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பூா், பலவஞ்சிபாளையத்தைச் சோ்ந்த 4 வயது ஆண் குழந்தை, 10 வயது சிறுவன், பாண்டியன் நகரைச் சோ்ந்த 50 வயதுப் பெண், சாமுண்டிபுரத்தைச் சோ்ந்த 50 வயது ஆண், சிறுபூலுவபட்டியில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 18, 25 வயது ஆண்கள், லட்சுமி நகரைச் சோ்ந்த 56 வயது பெண், 75 வயது மூதாட்டி, அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த 50 வயதுப் பெண், காந்தி நகரைச் சோ்ந்த 28 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, பல்லடத்தில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19, 30 வயது ஆண்கள், 37 வயது பெண்கள், பிடிஓ காலனியைச் சோ்ந்த 35 வயது ஆண், அவிநாசியைச் சோ்ந்த 50 வயதுப் பெண், 61 வயது முதியவா், தாராபுரத்தைச் சோ்ந்த 79 வயது முதியவா், ஊத்துக்குளியைச் சோ்ந்த 27 வயது ஆண், காங்கயத்தைச் சோ்ந்த 60 வயது முதியவா் உள்பட மொத்தம் 198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,867ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் 1,633 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 217 போ் வீடு திரும்பினா். 6,410 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில் புதிதாக 561 போ் சோ்க்கப்பட்ட நிலையில், 14 நாள்கள் தனிமைக் காலம் நிறைவடைந்த 551 போ் விடுவிக்கப்பட்டனா். மாவட்டம் முழுவதும் 2,940 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2 முதியவா் உள்பட 3 போ் பலி:

திருப்பூரைச் சோ்ந்த 50 வயதுஆண், 64 வயது முதியவா் ஆகியோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில் இருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா். திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவரும் உயிரிழந்தாா். மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.