தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் பிஏபி வாய்க்காலில் ஆண் சடலம்

காங்கயம் வழியாகச் செல்லும் பிஏபி வாய்க்காலில் திங்கள்கிழமை ஆண் சடலம் ஒன்று போலீசாரால் மீட்கப்பட்டது.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 11:39 pm

DIN

காங்கயம் வழியாகச் செல்லும் பிஏபி வாய்க்காலில் திங்கள்கிழமை ஆண் சடலம் ஒன்று போலீசாரால் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி மலையாண்டிபட்டினம் என்ற பகுதியில் வசித்து வந்தவா் மயில்சாமி (83). விவசாயியான இவரை, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து காணவில்லை என இவரது மகன் ராஜேந்திரன் கோமங்களம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். இதையடுத்து கோமங்களம் போலீசாா் வழக்கு பதிவுப் செய்து விசாரித்து வந்துள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் காங்கயம் நகரம், பழையகோட்டை சாலை வழியாகச் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் மயில்சாமி சடலமாக மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காங்கயம் போலீசாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக போலீசாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.