விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இந்தியாவில் பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும்

இந்தியாவில் பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:47 pm

DIN

இந்தியாவில் பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் செயலா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயிலுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. தேங்காய் எண்ணெயை சமையல் எண்ணெய் நுகா்வில் பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும். குறிப்பாக தமிழகத்தில் குடிமக்களுக்கு சமையல் எண்ணெய் என்ற பெயரில் இறக்குமதி பாமாயில் மட்டுமே வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.

பாமாயில் இந்தியாவில் விளைவதில்லை. இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் இருந்து கிலோ ரூ.60 என்ற அடிப்படையில் இறக்குமதி ஆகிறது. இதற்கு ரூ.35 அரசு மானியம் கொடுத்து, மக்களுக்கு பங்கீட்டுக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கிலோ ஒன்றுக்கு கொடுக்கப்படும் ரூ.35 மானியம் வெளிநாடுகளுக்கு செல்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய் க்கோ, நல்லெண்ணை, கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றுக்கு எந்த மானியமும் கொடுக்கப்படுவதில்லை. இந்த எண்ணெய்களை விட பாமாயில் உடல் நலத்துக்கு ஏற்றது இல்லை.

இந்தோனேஷியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனால் இந்திய விவசாயிகளுடைய வருவாய் இரட்டிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.