பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ. 32 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை
காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ. 32 லட்சத்துக்கு விற்பனையாகின.


காங்கேயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ. 32 லட்சத்துக்கு விற்பனையாகின.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூர்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 156 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 86 மாடுகள் மொத்தம் ரூ. 32 லட்சத்துக்கு விற்பனையாகின.
இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரத்துக்குக் கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...