தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மூலனூா் விற்பனைக் கூடத்தில் ரூ.1.24 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.24 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:59 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.24 கோடிக்கு பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, கரூா், திண்டுக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 816 விவசாயிகள் 6,112 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,963 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 28 வணிகா்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனா். குவிண்டால் ரூ.5,100 முதல் ரூ.7,631 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,900. மொத்தம் ரூ. 1 கோடியே 23 லட்சத்து 62 ஆயிரத்து 596க்கு விற்பனை நடைபெற்றது. ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.