ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூரில் உளவியல் நூல் வெளியீட்டு விழா

உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரியில் உளவியல் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பூரில் உளவியல் நூல் வெளியீட்டு விழா.
Updated On :23 ஏப்ரல் 2021, 1:49 pm

DIN

உலக புத்தக தினத்தை முன்னிட்டு திருப்பூர் நிஃப்ட்-டீ கல்லூரியில் உளவியல் நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட்-டீ பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் நூலகர் எஸ்ஏ.முத்துபாரதி எழுதிய உனக்குள்ளே ஒரு எதிரி என்கிற உளவியல் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
 
உலக புத்தக தினம் மற்றும் காப்புரிமை தினத்தை முன்னிட்டு இந்த நூல் வெளியீட்டு விழா நிஃப்ட்-டீ கல்லூரி நூலக வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில், கல்லூரி நிர்வாக ஒருங்கிணைப்பாளர் என்.சண்முகம் ஐ.ஏ.எஸ். வெளியிட ஃபேம் துறைத் தலைவர் பி.பி.கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் மகேஷ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
 
இந்த நூலை வெளியிட்ட என்.சண்முகம் பேசுகையில், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் எதிர்மறை எண்ணங்களே அவரவர் செயல்பாடுகளுக்கு எதிரியாக இடையூறாக இருக்கின்றன என்பதை உணர்த்தும் உளவியல் சார்ந்த பல கட்டுரைகள் அடங்கிய இந்நூல் வாசகர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றார். 

இறுதியாக நூலாசிரியர் எஸ்ஏ.முத்துபாரதி ஏற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் பி.வி. சத்தியநாராயணன் ஒருங்கிணைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.