ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அவிநாசியில் மின்னல் தாக்கி தீப்பிடித்த எரிந்த தென்னை மரங்கள்

அவிநாசியில் திடீரென மின்னல் தாக்கியதில், தோட்டத்துக்குள் இருந்து தென்னை மரங்கள் சனிக்கிழமை மாலை தீப்பிடித்து எரிந்தது.

News image
தீப்பிடித்து எரிந்த தென்னை மரங்கள்.
Updated On :24 ஏப்ரல் 2021, 2:31 pm

DIN

அவிநாசியில் திடீரென மின்னல் தாக்கியதில், தோட்டத்துக்குள் இருந்து தென்னை மரங்கள் சனிக்கிழமை மாலை தீப்பிடித்து எரிந்தது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வர தயக்கம் காட்டி வருகின்றனர். 

இதன்தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை முதலே அதிகளவு வெப்பம் நீடித்த நிலையில், மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து திடீரென இடி, மின்னலுடன் பலத்த காற்று விசியதில், அவிநாசி முத்துச்செட்டிபாளையம் கோயில் வீதி, சின்னத் தோட்டத்திற்குள் இருந்த தென்னை மரம் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. 

அடுத்தடுத்த மரங்களின் மீது தீ பரவத் துவங்கி பார்த்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதனால், தோட்டத்துப் பகுதி மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.