ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மேள, தாளத்துடன் மனு அளித்த நாட்டுப்புறக் கலைஞர்கள்

திருமணம், கோயில் விழாக்களில் மங்கல இசை வாசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் நூதன முறையில் திங்கள்கிழமை மனு அளித்தனர். 

News image
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேள, தாளங்களுடன் திங்கள்கிழமை மனு அளித்த நாட்டுப்புறக்கலைஞர்கள்.
Updated On :2 ஆகஸ்ட் 2021, 8:30 am

DIN

திருமணம், கோயில் விழாக்களில் மங்கல இசை வாசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுப்புறக்கலைஞர்கள் நூதன முறையில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் நாள்கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் மாநில அமைப்பாளர் கே.எம்.கணேசன் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் மேள, தாளங்ளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அந்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். கரோனா காலத்தில் வாழ்வாதரத்தை இழந்த 10க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 

ஆகவே, எங்களது வாழ்வாதரத்தைக் பாதுகாக்கும் வகையில் திருமணம், கோயில் விழாக்களில் மங்கல இசை வாசிக்க அனுமதி வழங்க வேண்டும்.  அனைத்து கோயில்களிலும் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். 

Story image

60 வயது முதிர்ந்த முதிர்ந்த கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு மாவட்டந்தோறும் தலா 50 கலைஞர்களுக்கு இலவசமாக இசைக்கருவிகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.